Friday, July 2, 2021

தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்.

 தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்.


ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றி
ஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றி
ஓம் ஸ்ரீ கந்தா போற்றி
ஓம் ஸ்ரீ கடம்பா போற்றி
ஓம் ஸ்ரீ இடும்பா போற்றி
ஓம் ஸ்ரீ கபாலீஸ்வரா போற்றி
ஓம் ஸ்ரீ ருத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சிவனே போற்றி
ஓம் ஸ்ரீ கற்பகத்தாயே போற்றி
ஓம் ஸ்ரீ காமாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ காயத்ரீயே போற்றி
ஓம் ஸ்ரீ மஹாவிஷ்ணவே போற்றி
ஓம் ஸ்ரீ நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாஸுதேவனே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே போற்றி
ஓம் ஸ்ரீ வைதீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அண்ணாமலையானே போற்றி
ஓம் ஸ்ரீ ம்ருத்யுஞ்ஜனே போற்றி
ஓம் ஸ்ரீ சரபேஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ நந்தீஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ அதிகார நந்தியே போற்றி
ஓம் ஸ்ரீ ஹரிஹர புத்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ பெருமாளே போற்றி
ஓம் ஸ்ரீ சத்திய நாராயணனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தான கோபாலனே போற்றி
ஓம் ஸ்ரீ கோவிந்தனே போற்றி
ஓம் ஸ்ரீ கிருஷ்ணா போற்றி
ஓம் ஸ்ரீ ராமா போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மனே போற்றி
ஓம் ஸ்ரீ ஹயக்ரீவா போற்றி
ஓம் ஸ்ரீ சுதர்ஸனா போற்றி
ஓம் ஸ்ரீ தன்வந்திரியே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணா போற்றி
ஓம் ஸ்ரீ ஆஞ்சநேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஆதியந்தப்பிரபுவே போற்றி
ஓம் ஸ்ரீ கருட பகவானே போற்றி
ஓம் ஸ்ரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ சரஸ்வதியே போற்றி
ஓம் ஸ்ரீ மீனாட்சியே போற்றி
ஓம் ஸ்ரீ அன்னபூரணியே போற்றி
ஓம் ஸ்ரீ புவனேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ அபிராமியே போற்றி
ஓம் ஸ்ரீ லலிதாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ அஷ்ட லக்ஷ்மியே போற்றி
ஓம் ஸ்ரீ ராஜராஜேஸ்வரியே போற்றி
ஓம் ஸ்ரீ பத்ரகாளியே போற்றி
ஓம் ஸ்ரீ ச்யாமளாவே போற்றி
ஓம் ஸ்ரீ பிரத்யங்கராவே போற்றி
ஓம் ஸ்ரீ வாராகியே போற்றி
ஓம் ஸ்ரீ சாகம்பரியே போற்றி
ஓம் ஸ்ரீ மாரியம்மாவே போற்றி
ஓம் ஸ்ரீ மூகாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினியே போற்றி
ஓம் ஸ்ரீ பவானியே போற்றி
ஓம் ஸ்ரீ கர்பரக்ஷாம்பிகையே போற்றி
ஓம் ஸ்ரீ சந்தோஷிமாதாவே போற்றி
ஓம் ஸ்ரீ மஹிஷாசுரமர்த்தினியே போற்றி
ஓம் ஸ்ரீ சப்த கன்னிகளே போற்றி
ஓம் ஸ்ரீ திருவிளக்கே போற்றி
ஓம் ஸ்ரீ துளசியே போற்றி
ஓம் ஸ்ரீ சூரியனே போற்றி
ஓம் ஸ்ரீ சந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ அங்காரகனே போற்றி
ஓம் ஸ்ரீ புதனே போற்றி
ஓம் ஸ்ரீ குருபகவானே போற்றி
ஓம் ஸ்ரீ சுக்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ சனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகுவே போற்றி
ஓம் ஸ்ரீ கேதுவே போற்றி
ஓம் ஸ்ரீ நாரதா போற்றி
ஓம் ஸ்ரீ இந்திரனே போற்றி
ஓம் ஸ்ரீ வருணனே போற்றி
ஓம் ஸ்ரீ வாயுவே போற்றி
ஓம் ஸ்ரீ அக்னியே போற்றி
ஓம் ஸ்ரீ குபேரா போற்றி
ஓம் ஸ்ரீ யமனே போற்றி
ஓம் ஸ்ரீ ராகவேந்திரா போற்றி
ஓம் ஸ்ரீ வாஸ்து தேவனே போற்றி
ஓம் ஸ்ரீ நாகராஜாவே போற்றி
ஓம் ஸ்ரீ வீரபத்ரனே போற்றி
ஓம் ஸ்ரீ பைரவா போற்றி
ஓம் ஸ்ரீ மாக்கண்டேயா போற்றி
ஓம் ஸ்ரீ ஐயனாரே போற்றி
ஓம் ஸ்ரீ முனிஸ்வரனே போற்றி
ஓம் ஸ்ரீ கருப்பண்ணசாமியே போற்றி
ஓம் ஸ்ரீ மதுரைவீரனே போற்றி
ஓம் ஸ்ரீ அகத்திய ரிஷியே போற்றி
ஓம் ஸ்ரீ ஆதிசங்கரனே போற்றி
ஓம் ஸ்ரீ அறுபத்திமூவர்களே போற்றி
ஓம் ஸ்ரீ ஆழ்வார்களே போற்றி
ஓம் ஸ்ரீ மகரிஷிகளே போற்றி
ஓம் ஸ்ரீ சித்தர்களே போற்றி
ஓம் ஸ்ரீ வேதங்களே போற்றி
ஓம் ஸ்ரீ உபநிஷத்துகளே போற்றி
ஓம் ஸ்ரீ இதிகாச புராணங்களே போற்றி
ஓம் ஸ்ரீ காமதேனுவே போற்றி
ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாவே போற்றி
ஓம் ஸ்ரீ ஆயுர்தேவீயே போற்றி
ஓம் ஸ்ரீ சகலதேவதா போற்றி போற்றி போற்றி ஓம்


அனைத்துதெய்வங்களின் #பேரருளைபெற்று_வாழ்வாங்கு #வாழ்வோம் !!!!!!

ஈஸ்வரன் பட்டத்தின் சிறப்பு என்ன ?

 ஈஸ்வரன் பட்டத்தின் சிறப்பு என்ன ?ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்?என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

யாரெல்லாம் ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார் தெரியுமா? 

விக்னேஸ்வரர், நந்தீஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள்.

இதில் கூடுதலாக ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர் முருகப் பெருமான் கும்பகோணம் அருகில் உள்ள திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பிரணவேஸ்வரர் என்ற பட்டம் பெற்றவர்.

முருகப்பெருமான் தந்தைக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சுவாமி என அழைக்கப்படுகிறார் 

சிறியவனாகிய தான் தந்தைக்கு பிரணவ மந்திரத்திற்கான உபதேசத்தை செய்ததை நினைத்து முருகப்பெருமான் வருந்தினார். அந்த வருத்தத்தைப் போக்க அதற்கு பரிகாரம் தேடும் பொருட்டு இந்த திருக்கோயிலில் முருகன் ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மன அமைதிக்காக வேண்டினார்.

சிவபெருமான் முருகனுக்கு காட்சி தந்து, மன வேதனையுடன் இருந்த முருகனை தேற்றி நீயும், நானும் வேறில்லை, இருவரும் ஒன்றே என கூறி மனதை தேற்றினார்.

அப்போது முருகப்பெருமானுக்கு இனி உனக்கு பிரணவேஸ்வரர் என்ற பெயர் அமையும் என்றார். இந்த கோயிலில் உள்ள முருகப்பெருமானை வேண்டிக் கொண்டால் திக்குவாய் உள்ளவர்களுக்கு பேச்சு சிறப்பாக வரும், நல்ல மன ஆறுதல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்?

ஈஸ்வரன்   என்றால்  உலகிலுள்ள அனைவருக்கும் தலைவன் என்று பொருள். 

ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்களில்  நந்தீஸ்வரர் ஒருவர்.   இவர் சிவபெருமானை நோக்கி தன் ஆயுளை நீட்டிக்க தவம் புரிந்ததால் அவர்   பக்தியில் மயங்கிய சிவபெருமான் தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தையும் கொடுத்து நந்தியை வணங்கிய  பின்னர்தான் ஈஸ்வரனை தரிசிக்க வேண்டும்   என்ற சிறப்பு அந்தஸ்தை கொடுத்தார்.

இரண்டாவது நபராக சண்டிகேஸ்வரரை பற்றி காண்போம்  சண்டிகேஸ் என்பது ஒரு பதவியாகும். சண்டிகேஸ்வரர் இயற்பெயர்  விசாலசருமன் ஆகும். இவர் இளமையில் மண்ணில் சிவலிங்கத்தை செய்து வழிபட்டபோது அவர் மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற மாடுகள் தானாக பாலை ஊற்றி சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தன. அப்போது விசாலசருமன்   லிங்கத்தின் அருகில் ஆழ்ந்த  தியானத்தில் இருப்பதை கண்ட அவர் தந்தை அவரை அடித்தது மற்றுமின்றி லிங்கத்தை காலால் உதைத்தார். இதை கண்ட  விசாலசருமன் கோபப்பட்டு தன் அருகில் இருந்த கோடாரியால் தன் தந்தையின் காலை வெட்டினார் . இதை கண்ட சிவன் அவர் முன் தோன்றி அவரின் தந்தையின் காலை குணப்படுத்தி  விசாலசருமன்  அவர்களுக்கு தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை வழங்கினார். கைலாயத்தை  நிர்வகிக்கும் பொறுப்பையும் கொடுத்தார்.

மூன்றாவதாக,  இலங்கை பேரரசர் ராவணன்,  ஈஸ்வரனை வணங்க கைலாயத்தை நோக்கி சென்றபோது அவருக்கு ஏற்பட்ட யோசனையால் கைலாய மலையை  தூக்கி இலங்கைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது  சிவபெருமான் கோபமுற்று தனது கால் கட்டை விரலால் கைலாய மலையை அழுத்தினார். அப்போது மலையின் அடியில் அகப்பட்ட ராவணன் தனது தொடையை நரம்புகளால் சாமகான இசையை இசைத்து சிவபெருமானே மனமுருக செய்தார் இவரின் பக்தியை போற்றி தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தையும் வழங்கினார்.

நான்காவதாக, ஈஸ்வரன் என்றும் பாராமல் தன் கடமையில் இருந்து விடுபடாமல் தன் ஈஸ்வரனையும் ஏழரை ஆண்டு காலமாக தனது வக்கிர பார்வையால் ஆட்கொண்ட நவகிரகங்களில் ஒருவரான சனீஸ்வரருக்கு தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை கொடுத்து கௌரவ படுத்தினார்

ஐந்தாவதாக,  முழுமுதற்கடவுளான விக்னேஸ்வரன் ஆவார் பொதுவாக எந்த கடவுளாக இருந்தாலும்  விக்னேஸ்வரரை வணங்கிய பின்னர் தான் வணங்குகின்றோம் மேலும் விநாயகரை நாம் நினைத்தபடி மஞ்சள் மற்றும் சானத்திலும் பிடித்து வழிபடுகின்றோம்.அவரும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராவார்

ஆறாவதாக, ஆறுமுக கடவுளான பிரணவிஸ்வரர் . ஆம் முருகப்பெருமான் தனது தந்தைக்கு பிரணவ மந்திரத்தை கூறிய பின்னர் தந்தையை அவமானப்படுத்தியதாக எண்ணி வருத்தத்தில் இருந்தார் அப்போது சிவபெருமான் எனக்கு தெரிந்த பிரணவ மந்திரம் உனக்கும் தெரிந்ததால் தனக்கு நிகரான ஈஸ்வரன் பட்டத்தை கொடுத்து மகிழ்ந்தார்.

Tuesday, June 29, 2021

அருள்மிகு பிருந்தாவனம் கோவில்


கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளை யாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.

வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த விரஜ பூமி சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

இதை வலமாகக் சுற்றி வருவது, விரஜ பரிக்ரமா எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், பரிக்ரமாவை முக்கியமாகக் கருதுகிறார்கள்.

கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் விரஜ பூமியில் உள்ளன. பிருந்தா என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர்.

பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும்.

 தினமும் சொல்ல 1000 கோடி கோவிலுக்கு சென்ற பலன் கிடைக்கும். ஓம் ஸ்ரீ கணபதியே போற்றி ஓம் ஸ்ரீ கற்பக விநாயகனே போற்றி ஓம் ஸ்ரீ கஜமுகனே போற்றி ஓம...